இக்னோவில் செப்.24- இல் எம்.பி.ஏ., பி.எட். படிப்புக்கான நுழைவுத் தேர்வு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (இக்னோ) ஜனவரி -2018 சேர்க்கைக்கான எம்.பி.ஏ. மற்றும் பி.எட். படிப்புக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 24 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (இக்னோ) ஜனவரி -2018 சேர்க்கைக்கான எம்.பி.ஏ. மற்றும் பி.எட். படிப்புக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 24 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
     இது குறித்து இக்னோ முதுநிலை மண்டல இயக்குநர் சண்முகம்
 விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.  மற்றும் பி.எட். படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் 24  காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வும்,  அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் பி.எட். நுழைவுத் தேர்வும் நடத்தப்படவுள்ளது.
நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களில் 28,108 பேர் தேர்வெழுத அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 122 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் தியாகராஜர் கல்லூரியில் தேர்வு மையம் உள்ளது.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இக்னோவின் இணையத்தில் (‌w‌w‌w.‌i‌g‌n‌o‌u.​a​c.‌i‌n) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், இக்னோ மதுரை மண்டல மையத்தில் தொலைபேசி எண் 0452-2380733, 2380775 அல்லது r​c‌m​a‌d‌u‌r​a‌i@‌i‌g‌n‌o‌u.​a​c.‌i‌n  என்ற மின்னஞ்சலில் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.
தேர்வாளர்கள் அனைவரும் தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடங்கள் முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com