பல்கலைக்கழக கல்லூரியில் "தூய்மையே சேவை' உறுதிமொழி ஏற்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி ஏற்பு மற்றும் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி ஏற்பு மற்றும் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
       மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி அழகர்கோவில் சாலையில் உள்ளது. தூய்மையே சேவை திட்டத்தை முன்னிட்டு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.பி. செல்லத்துரை ஆலோசனையின்பேரில், கல்லூரி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதில், கல்லூரி முதல்வர் இருளப்பன், கல்லூரி தமிழ்த் துறை தலைவர் அ. சாந்தி உள்ளிட்ட அனைத்து பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
       கல்லூரி வளாகம் சுத்தம் செய்த நிலையில், தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில்,  திறந்தவெளி மலம் கழித்தலை முற்றிலுமாக தடுத்தல், சுகாதாரத்தை பேணுதல் உள்ளிட்ட உறுதிமொழியை மாணவ, மாணவியர் ஏற்றனர்.       அக்டோபர் 2 ஆம் தேதி வரை கல்லூரி தமிழ்த் துறை சார்பில் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது மற்றும் தூய்மை பணியில் ஈடுபடுவது என அத் துறையினர் தெரிவித்தனர்.
சரசுவதி நாராயணன் கல்லூரி: பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியில் தூய்மைப் பணி உறுதிமொழி மற்றும் கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
 கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் மு. கண்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர் ராமகிருஷ்ணன் தூய்மை பணியின் உறுதிமொழியை வாசித்தார். மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, திட்ட இயக்குநர் விஜயகுமார் வரவேற்றார்.பேராசிரியர் மீனா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com