வைகை சீரமைப்புப் பணிக்கு சிறப்புக் குழு: ஆட்சியர் தகவல்

மதுரை வைகை நதியை சீரமைக்கும் வகையில் ஐந்து திட்டங்களைச் செயல்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்தார்.

மதுரை வைகை நதியை சீரமைக்கும் வகையில் ஐந்து திட்டங்களைச் செயல்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்தார்.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:
தூய்மையே சேவை இயக்கம் சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜயந்தி தினத்தில், அனைத்துப் பகுதி கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், அரசு அலுவலகங்களில் தூய்மை பணி நடத்தப்படவுள்ளது.   இயற்கையை பாதுகாக்க பாலித்தீன் பைகள் போன்றவற்றை தவிர்க்கவேண்டும்.  மதுரை மாவட்ட அடையாளமாகத் திகழும் வைகையை புனரமைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் 5 திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளனர்.
அதன்படி,  வைகையில் திடக்கழிவுகள், குப்பைகளை அகற்றுதல், கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,  வைகைக்கு வரும் நீர்வரத்துப் பாதைகளைச் சீர்படுத்துதல், ஆற்றோரம் மரக்கன்றுகளை நடுதல், ஆற்றில் தண்ணீர் செல்லுவதற்கேற்ப சீர்படுத்துவது ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
மேலும்,  செப்டம்பர் 28 ஆம் தேதி வைகை ஆற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் பொதுமக்கள், தன்னார்வலர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் என அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து சுத்தம் செய்யும் பணி நடைபெறவுள்ளது என்றார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் டோக் பெருமாட்டி கல்லூரி வளாகத்தில் சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சொக்கிகுளம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளிலும் தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்கப்பட்டு, தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட பொறுப்பு அலுவலர் அருண்மணி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.      மதுரை மாநகராட்சி சார்பில், சின்னச் சொக்கிகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி காக்கைபாடினியார் பெண்கள் பள்ளியில் நடந்த துப்புரவுப் பணியில், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com