"சிலைகள் சொல்லும் கதைகள்' குறுந்தகடு வெளியீடு

மதுரையில் ரேடியோ சிட்டி வானொலி சார்பில் "சிலைகள் சொல்லும் கதைகள்' குறுந்தகடு புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மதுரையில் ரேடியோ சிட்டி வானொலி சார்பில் "சிலைகள் சொல்லும் கதைகள்' குறுந்தகடு புதன்கிழமை வெளியிடப்பட்டது.
ரேடியோ சிட்டி வானொலி சார்பில் மதுரையில் உள்ள சிலைகள் மற்றும் அதன் வரலாறு குறித்து "சிலைகள் சொல்லும் கதைகள்' என்ற நிகழ்ச்சி 50 வாரங்கள் ஒளிப்பரப்பப்பட்டது.  இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் வெளியான 50 சிலைகள் அதன் வரலாறு குறுந்தகடாக தயாரிக்கப்பட்ட நிலையில் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் குறுந்தகடை வெளியிட பொருளியல் துறைத்தலைவர் முத்துராஜ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரையில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு "சிலைகள் சொல்லும் கதைகள்' குறுந்தகடு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் சில அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கும் குறுந்தகடு வழங்கப்பட்டது.
சிலைகள் சொல்லும் கதைகள் குறுந்தகடு மற்றும் விடியோக்கள் தேவைப்படுவோர் மதுரை ரேடியோ சிட்டி வானொலி நிலைய அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com