புகையற்ற போகி: ஆட்சியர், ஆணையர் வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத புகையற்ற போகிப் பண்டிகையைக் கொண்டாட ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ்,

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத புகையற்ற போகிப் பண்டிகையைக் கொண்டாட ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ்,  மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள வேண்டுகோள்:
 பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடும்போது பழைய பாய்கள், கிழிந்த துணிமணிகள், விவசாயக் கழிவுகளை தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம். பல நகரங்களில் போகியன்று டயர்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருள்களை சிறுவர்களும், இளைஞர்களும் கொளுத்திவிடுகின்றனர். 
 இத்தகைய பொருள்களை எரிப்பதால் வெளியேறும் நச்சுப்புகையில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடு, கந்தக-டை ஆக்ஸைடு போன்றவை மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கின்றன. இவற்றை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம், நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாச நோய்கள் ஏற்படக் கூடும்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை எரித்து  காற்றை மாசுப்படுத்தும் வகையில் செயல்படுவது சட்டப்படி குற்றமாகும். சந்தோஷமாகக் கொண்டாட வேண்டிய பொங்கல் திருநாளில் இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் பெற்றோர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆணையர்:   போகிப் பண்டிகையன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டை முன்னிட்டு மக்கள் பழைய பொருள்களை அப்புறப்படுத்துவது வழக்கம். அவ்வாறு அப்புறப்படுத்தும் பொருள்களை பொது இடங்களில் கொட்டுவதாலும், திறந்தவெளியில் எரிப்பதாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
இந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று வீட்டிலிருந்து அகற்றப்படும் குப்பைகளை மாநகராட்சியில் அந்தந்த வார்டுகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும் தொட்டியில் போட்டு, மதுரை மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாகப் பராமரிப்பதற்கு பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com