மதுரையில் 5 நாள் மதுக்கடைகள் அடைப்புமதுரையில் 5 நாள் மதுக்கடைகள் அடைப்பு

மதுரை மாவட்டத்தில் தைப் பொங்கலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் (14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை) மற்றும் குடியரசு தினம், வள்ளலார் தினத்தன்று மதுக்கடைகள்

மதுரை மாவட்டத்தில் தைப் பொங்கலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் (14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை) மற்றும் குடியரசு தினம், வள்ளலார் தினத்தன்று மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு சண்முகாநகர், அவனியாபுரம், சந்தோஷ்நகர், வில்லாபுரம் உள்ளிட்ட பகுதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.
திருவள்ளுவர் தினம்: திங்கள்கிழமை (ஜன.15) திருவள்ளுவர் தினம் என்பதால் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகம் ஆகியவற்றில் மது விற்பனை நடைபெறாது.
அலங்காநல்லூரில் வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு பாலமேடு சாலை, கேட் கடை, சர்க்கரைஆலை சாலை, சிக்கந்தர்சாவடி, கொண்டையம்பட்டி, குமாரம், வாகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகள், பார்கள் அடைக்கப்பட்டிருக்கும். மேலும், 26-ஆம் தேதி குடியரசு தினம், வரும் 31-ஆம் தேதி வள்ளலார் தினம் என்பதாலும் அந்த இரு நாள்களிலும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். திருவள்ளுவர், குடியரசு மற்றும் வள்ளலார் தினத்தன்று தேசிய மாணவர் படை மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கான மது விற்பனையகத்திலும் மது விற்பனை நடைபெறாது. மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நாள்களில் விதிமீறல் ஏற்படாமலிருக்க கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com