தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

உசிலம்பட்டி-கவண்டன்பட்டி சாலையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

உசிலம்பட்டி-கவண்டன்பட்டி சாலையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கவண்டன்பட்டி சாலையில் தாலுகா காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள இரண்டு மின் கம்பங்களுக்கு இடையே உயர் மின்னழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால், அச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இந்த மின்கம்பிகளில் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும், பயணிகள் மற்றும் பள்ளி பேருந்துகள் அடிக்கடி சென்று வருவதால், அசம்பாவிதச் சம்பவங்கள் நடப்பதற்கு முன், தாழ்வாக உள்ள இந்த மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com