இயற்கை வள பாதுகாப்பு நாளை விழிப்புணர்வு ஓட்டப் பந்தயம்

இயற்கை வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி மதுரையில்  ஞாயிற்றுக்கிழமை (நவ. 18) விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது. 

இயற்கை வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி மதுரையில்  ஞாயிற்றுக்கிழமை (நவ. 18) விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது. 
  தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரி சார்பில்  பள்ளி மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவுகளின் கீழ் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
 போட்டிகளை மாநகர காவல் துணை ஆணையர் அருண் பாலகோபாலன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், மடீட்சியா தலைவர் கே.பி.முருகன், தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரித் தலைவர் வள்ளி ராமசாமி உள்ளிட்டோர் தொடக்கி வைக்க உள்ளனர்.
   தெப்பக்குளத்தில் உள்ள தியாகராஜர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி,  ஹானா ஜோசப் மருத்துவமனை வளாகத்தில் பந்தயம் 
நிறைவடைய உள்ளது. மூன்று மற்றும் ஐந்து கிமீ என இரு பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும்.
 போட்டிகளில் பங்கேற்க b‌i‌t.‌l‌y/​T​S​M​R​U​N2018  என்ற இணையதளம் மூலமாகவும், 9688633003, 9488574158 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com