தேனியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தேனியில் இந்து முன்னணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தேனியில் இந்து முன்னணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி நகரத் தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் பி.முருகன், மாவட்டச் செயலர் உமையராஜன், தேனி ஒன்றியச் செயலர் திலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
பழனியில்...
பழனி பேருந்து நிலைய ரவுண்டானா அருகே பழனி நகரம், ஒன்றியம் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் புதன்கிழமை காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டவும், உத்தரப்பிரதேசம், அலகாபாத் மற்றும்
லக்னௌ நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் கோயில் இருந்ததற்கான சான்றுகள் குறித்தும் கூட்டத்தில் பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, நகரச் செயலாளர் கோபிநாத், நகர பொதுச் செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com