ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் குறைதீர் பிரிவு தொடக்கம்

தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு மாவட்ட ஊராட்சிகள் நிர்வாகம் சார்பில் குடிநீர் குறைதீர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு மாவட்ட ஊராட்சிகள் நிர்வாகம் சார்பில் குடிநீர் குறைதீர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அபிதா ஹனீப் கூறியது: ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி குடிநீர் விநியோகம், குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றை கண்காணித்து பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றியம் வாரியாகவும் குடிநீர் குறைதீர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா ஒரு மண்டல அலுவலர், ஊராட்சிகள் வாரியாக துணை மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, காலை 6 மணி முதல் 8 மணி வரை  குடிநீர் விநியோகப் பணிகளை கள ஆய்வு செய்து வருகின்றனர்.
 ஊராட்சிகள் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் குறைதீர் பிரிவு 04546-254517 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆண்டிபட்டி ஒன்றியம்- 04546-242328, க.மயிலை ஒன்றியம்- 04546-227260, பெரியகுளம் ஒன்றியம்- 04546-231254, தேனி ஒன்றியம்- 04546-252430, போடி ஒன்றியம்- 04546-280218, சின்னமனூர் ஒன்றியம்- 04554-247376, உத்தமபாளையம் ஒன்றியம்- 04554-265238, கம்பம் ஒன்றியம்- 04554-271276 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com