தேனி மாவட்டத்தில் 97.1 சதவீதம் பேர் தேர்ச்சி: மாநில அளவில் 6-ம் இடம்

 தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் 97.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளனர்.

 தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் 97.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளனர்.
 மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 198 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8,489 மாணவர்கள், 8,107 மாணவிகள் என மொத்தம் 16,596 பேர் எழுதினர். இதில் 8,165 மாணவர்கள், 7,949 மாணவிகள் என மொத்தம் 16,114 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு தேர்வில் 96.93 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 8-ஆம் இடத்தை பிடித்திருந்தனர். இந்த ஆண்டு 97.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று 6-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.
100 சதவீதம் தேர்ச்சி: மாவட்டத்தில் 82 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்பட மொத்தம் 198 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், 35 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்பட மொத்தம் 99 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 96.8 சதவீதம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com