குள்ளப்பக்கவுண்டன்பட்டியில் முத்தாலம்மன், மந்தையம்மன் கோயில் திருவிழா

தேனி மாவட்டம் கம்பம் அருகே குள்ளப்பக்கவுண்டன்பட்டியில் முத்தாலம்மன், மந்தையம்மன் கோயில் திருவிழா புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே குள்ளப்பக்கவுண்டன்பட்டியில் முத்தாலம்மன், மந்தையம்மன் கோயில் திருவிழா புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
 முதல்நாள் புதன்கிழமை மாலை இன்னிசை கச்சேரியுடன் தொடங்கி, வியாழக்கிழமை காலையில் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். மதியம் அம்மன், சிவன், பார்வதி, ராதா கிருஷ்ணன், முருகன், விநாயகர் வேடங்களில் பக்தர்கள் டிராக்டரில் ஊர்வலமாக முக்கிய தெருக்களில் வந்தனர். ஊர்வலத்தின் போது அன்னதானம், நீர் மோர் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வழங்கினர். மாலையில் பெண்கள், சிறுமிகள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
முக்கிய வீதிகளில் சென்று, முல்லை பெரியாற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.  இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அனைத்து சமுதாயத்தினரும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com