விவசாயிகளுக்கு நாற்றாங்கால் பரப்பு பயிற்சி

போடியில் நாற்றாங்கால் பரப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளித்தனர்.

போடியில் நாற்றாங்கால் பரப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளித்தனர்.
குள்ளப்புரம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் தங்கிப் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் மாணவிகள் சிவரஞ்சிதா, கார்த்திகா, ஷாலினி, ஜீவிதா, செல்வபாரதி, பிரகதீஸ்வரி, ஆரியா சுரேந்திரன், சப்ரீனா ஆப்ரிந், உஷா ஆகிய மாணவிகள் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்தும், நாற்றாங்கால் பரப்பு மற்றும் விதையளவு, நாற்றுக்களின் வயது, நீர் நிர்வாகம், இயந்திரம் மூலம் களை எடுத்தல் குறித்தும் செயல் முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
இதேபோல் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் இந்துமித்ரா, பிரியங்காதேவி, கோகுல்பிரியா, கெளசல்யா, கவிப்பிரியா, மகாலட்சுமி, தீபிஷா, லுசிண்டா ஆகியோர் கிராமப்புற தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் போடி பகுதியில் தங்கிப் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவிகள் போடி ராசிங்காபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com