கொடுவிலார்பட்டியில் அக்.15-இல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அக்டோபர் 15-ஆம் தேதி

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அக்டோபர் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
     இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு அலுவலகம், கம்மவார் சங்க கல்வி நிறுவனங்கள் ஆகியன இணைந்து நடத்தும் இந்த  வேலை வாய்ப்பு முகாமில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன.
     எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2,  தொழிற் பயிற்சி படிப்பு, பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு படித்த, 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண் மற்றும் பெண்கள் தங்களது அசல் கல்விச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com