போடி: தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது

போடியில் வியாழக்கிழமை தோட்டத்துக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது.

போடியில் வியாழக்கிழமை தோட்டத்துக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது.
 போடி சாலைக் காளியம்மன் கோயில் அருகே,  போடி நகர தி.மு.க. செயலர் மா.வீ.செல்வராஜூக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.  இங்கு ஒரு பகுதியில் வீடும், மோட்டார் அறையும் உள்ளன. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மோட்டார் அறை அருகே பாம்பு ஒன்று சீறும் சத்தம் கேட்டது. இதையடுத்து மா.வீ.செல்வராஜ் அங்கு சென்று பார்த்த போது பெரிய பாம்பு புகுந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாம்பு பிடிக்கும் வீரரான தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கண்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த கண்ணன் அந்த பாம்பை பிடித்தார். அது விஷத்தன்மை கொண்ட 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com