கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணி: கோம்பை பேரூராட்சிக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ்

தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சி சார்பில், கால்வாயை ஆக்கிரமித்து நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுப்பணித்துறையினர், இதுகுறித்து விளக்கம் அளிக்க

தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சி சார்பில், கால்வாயை ஆக்கிரமித்து நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுப்பணித்துறையினர், இதுகுறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் 130 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் 18 ஆம் கால்வாயில் 3 ஆண்டுக்கு பின் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்னதாக கோம்பை பேரூராட்சி பகுதியில் செல்லும் 18 ஆம் கால்வாய் பகுதிகளை பொதுப் பணித்துறை சார்பில் தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோம்பை கிழக்கு பகுதியில் 18ஆம் கால்வாயின் மூலமாக புதுக்குளத்துக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கான்கிரீட் சுவர் எழுப்பி தார் சாலை அமைக்கும் பணியை கோம்பை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்வது தெரியவந்தது.
இதையடுத்து தேனி பொதுப்பணித்துறை பாசன பிரிவு உதவிப் பொறியாளர் லட்சுமணன் அங்கு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார். மேலும் அதற்கான உரிய விளக்கும் அளிக்கும் படி கோம்பை பேரூராட்சி செயல் அலுவலருக்கு புதன்கிழமை நோட்டீஸம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com