பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வு: 1,825 பேர் எழுதினர்

தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை மொத்தம் 1,825 பேர் எழுதினர்.

தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை மொத்தம் 1,825 பேர் எழுதினர்.
தேனி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தேனி என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, என்.எஸ்.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேரிமாதா மெட்ரிக் பள்ளி, கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி, பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி, முத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி ஆகிய 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
தேர்வு எழுதுவதற்கு 2,259 பேர் விண்ணப்பித்திருந்ததில், மொத்தம் 1,825 பேர் தேர்வு எழுதினர். 434 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com