வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் பேரிடர் மீட்புப் பணிகள் ஒத்திகை

தேனி அருகே வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் வெள்ளிக்கிழமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தேனி அருகே வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் வெள்ளிக்கிழமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதும், மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழும் போதும், பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது, மீட்பு பணியில் ஈடுபடுவது, தொற்று நோய் பரவாமல் தடுப்பது, பேரிடர் மீட்புப் பணிகளில் அரசு அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருப்பையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com