விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்: கடும் நிபந்தனைகளுக்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு

போடியில், காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போடியில், காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போடி வர்த்தகர் சங்க பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு காவல் துணை கண்காணிப்பாளர் தி.ஈஸ்வரன் தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் போடி நகர் சேகர், போடி தாலுகா வெங்கடாசலபதி, சின்னமனூர் இமானுவேல் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
இதில், விநாயகர் சிலை அமைப்பதற்கு காவல்துறை சிபாரிசு பெற்று, மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும். சிலை அமைக்கும் இடங்களில் தகர கூரை அமைக்க வேண்டும். கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.
அப்போது, கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகிகள், கடுமையான நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சிலை அமைப்பதற்கு எளிய முறையில் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டம் அமைதியாக முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com