மூடப்பட்ட ஆலை முன் தொழிலாளர்கள் முற்றுகை

தேனி அருகே கோடங்கிபட்டி சாலையில் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் தனியார் நூற்பாலை முன், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி அருகே கோடங்கிபட்டி சாலையில் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் தனியார் நூற்பாலை முன், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி-கோடாங்கிபட்டி சாலையில் செயல்பட்டு வந்த தனியார் நூற்பாலை கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது. இந்த ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஆலைத் தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். 
இந்த நிலையில், தற்போது பூட்டிக் கிடக்கும் ஆலையில் உள்ள இயந்திரங்களை ஆலைக்கு கடன் வழங்கிய வங்கி நிர்வாகம் முலம் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலறிந்து, பூட்டி வைக்கப்பட்டுள்ள ஆலை முன், அதில் பணியாற்றிய 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், தொழிலாளர்கள் நலன் கருதி ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிகைகளை வலியுறுத்தினர்.
பின்னர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு தேனி காவல் நிலைய ஆய்வாளர் முருகானந்தம் கேட்டுக் கொண்டதை அடுத்து, தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com