அண்ணா பிறந்த நாள் விழா: சிலைக்கு கட்சியினர் மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சனிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சனிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியகுளத்தில் நகர அதிமுக சார்பில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. இப் பேரணிக்கு பெரியகுளம் நகர் செயலாளர் என்.வி.ராதா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்பிஎம்.சையதுகான் முன்னிலை வகித்தார். ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் ப.ரவீந்திரநாத் குமார் பேரணியை தொடக்கி வைத்தார். தென்கரையில் உள்ள தேவர் சிலை அருகே தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலையை பேரணி சென்றடைந்தது.
பின்னர் அண்ணா சிலைக்கு ரவீந்திரநாத்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தேனி எம்பி ஆர்.பார்த்திபன், முருக்கோடை இராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்டிபட்டியில்... தி.மு.க சார்பில் அதன் ஒன்றிய பொறுப்பாளர் மகாராஜன் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ராஜாராம் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அமமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் அக் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல ம.தி.மு.க சார்பில் ஆண்டிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஆண்டிப்பட்டி பேரூர் செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொடைக்கானலில்... அதிமுக சார்பில் நகர்ச் செயலர் ஸ்ரீதர் தலைமையில் அதிமுகவினர் கே.சி.எஸ்.திடலிலிருந்து ஊர்வலமாகச் சென்று ஏரிச்சாலை பிரையண்ட் பூங்கா அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் நகரச் செயலர் முகமது இப்ராஹிம் தலைமையில் கே.சி.எஸ்.திடலிலிருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில் நகர்ச் செயலர் கோவிந்தன் தலைமையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மேல்மலை ஒன்றியச் செயலர் பொன்னுத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com