எரிவாயு உருளை விநியோகத்தில் கூடுதலாக பணம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்: ஆட்சியர்

எரிவாயு உருளை விநியோகிக்கும்போது கூடுதலாக பணம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன் கூறினார்.

எரிவாயு உருளை விநியோகிக்கும்போது கூடுதலாக பணம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன் கூறினார்.
காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் நுகர்வோர் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பகுதியின் நுகர்வோர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், காரைக்காலில் உள்ள எரிவாயு முகவர்கள்  கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள், எரிவாயு உருளை முறையாக விநியோகிப்பது இல்லை. குறிப்பாக உருளை தரமானதாக இல்லை. சரியான நேரத்தில் தரப்படுவதில்லை. ரசீதில் குறிப்பிட்ட தொகையைக் காட்டிலும் கூடுதலாக பணம் கோரப்படுகிறது. கூடுதலாக எரிவாயு உருளை கோரினால் விதியை மீறி பணம் வசூலிக்கிறார்கள் என பல்வேறு புகார்களை தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட பாரத் பெட்ரோலிய நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் ஹரிகிருஷ்ணன், வீட்டில் உள்ள எரிவாயு உருளையில் எரிவாயு கசிவு இருந்தால், 1906 மற்றும் 1800224344  என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன் பேசியது: ரசீது பெற்றுக்கொண்ட பின்னரே பணம் கொடுக்க வேண்டும். ரசீதில் குறிப்பிட்ட தொகைக்கு மிகுதியாக பணம் கோரப்பட்டால், 9487685466 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற கூட்டம் முதல் முறையாக நடைபெறுகிறது. வரும் மாதங்களில் இருந்து கலந்தாய்வுக் கூட்டம் குறுகிய கால இடைவெளிக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார் ஆட்சியர்.
இதில் சார்பு ஆட்சியர் ஆர். கேசவன், குடிமைப் பொருள் வழங்கல் துணை இயக்குநர் பா. கீதா கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com