தேசிய ஓவினாம் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் ஆட்சியருடன் சந்திப்பு

தேசிய ஓவினாம் போட்டியில் பங்கேற்கச் செல்லும் காரைக்கால் மாணவர்கள்,   மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபனை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தேசிய ஓவினாம் போட்டியில் பங்கேற்கச் செல்லும் காரைக்கால் மாணவர்கள்,   மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபனை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில் 8-ஆவது அகில இந்திய ஓவினாம் தற்காப்புக் கலை போட்டி மே மாதம் 5 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் புதுச்சேரி மாநிலம் சார்பில் 20 மாணவ, மாணவியர், குழு மேலாளர் மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த கே. மும்மது அலி தலைமையில் இந்த போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
காரைக்காலில் இருந்து கலந்துகொள்ளச் செல்லும் 7 மாணவர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபனை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப்
பெற்றனர்.
ஓவினாம் தற்காப்புக் கலை சங்க பொதுச் செயலர்  எம். செண்பகவள்ளி, மக்கள் தொடர்பாளர் ரகுநாதன், முன்னாள் உலக சாம்பியன் ஆர். சரஸ்வதி ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.
மகாராஷ்டிராவில் நடைபெறும் போட்டியில் தேர்வு செய்யப்படுவோர், வரும் செப்டம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பர் என
தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com