அம்பு எய்தும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை மண்டல அளவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற அம்பு எய்தும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை மண்டல அளவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற அம்பு எய்தும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
சென்னை மண்டல அளவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ மாணவியரிடைய கைப்பந்து, கால்பந்து, அம்பு எய்துதல், பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் தமிழகம், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் நடைபெற்றன. அந்த வகையில், காரைக்கால் பள்ளியில் அம்பு எய்தும் போட்டி ஆக. 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில், சென்னை மண்டல அளவில் 20 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலிருந்து 26 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
காரைக்கால் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 14 வயதுக்குள்பட்டோருக்கு 20, 30, 50, 70 மீட்டர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில், முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, நிரவியில் செயல்படும் காரைக்கால் கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் சோமசுந்தரம் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி முதல்வர் (பொ) சுதீஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர், ஆசிரியைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த பிரிவில் முதன்மையாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், அடுத்த ஓரிரு மாதத்தில் குவஹாட்டியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர் என கேந்திரிய பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com