வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணி விழிப்புணர்வு பிரசாரம்வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணி விழிப்புணர்வு பிரசாரம்

கோட்டுச்சேரி பகுதியில் தூய்மைப் பணி குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரத்தில் மாவட்ட ஆட்சியர், மாணவியர் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

கோட்டுச்சேரி பகுதியில் தூய்மைப் பணி குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரத்தில் மாவட்ட ஆட்சியர், மாணவியர் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
தூய்மையான, பசுமையான காரைக்கால் என்ற திட்டத்தின்படி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, வாரந்தோறும் சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து அமைப்புகள் சேர்ந்து மேற்கொள்கின்றன.
அந்த வகையில், கோட்டுச்சேரி பகுதியில் முக்குலத்தோர் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தூய்மைப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் தலைமையில், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவியர் கலந்துகொண்டு, சாலையோரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றினர். இவர்களோடு கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவுத் தொழிலாளர்களும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாணவியர் அந்த பகுதியில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது, குப்பைகளை சாலையில் வீசியெறியாமல், துப்புரவுத் தொழிலாளர்கள் வரும்போது ஒப்படைக்கவேண்டும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளால் கழிவுநீர் வடிகால்கள் அடைப்பட்டு, கழிவுநீர் தேங்கி சுகாதாரத்தைக் கெடுக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com