கோயில் குளங்களை புனரமைக்க சிறப்பு கவனம் செலுத்த வலியுறுத்தல்

காரைக்கால் பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான குளங்களைப் புனரமைக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரிடம் வலியுறுத்தப்பட்டது.  

காரைக்கால் பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான குளங்களைப் புனரமைக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரிடம் வலியுறுத்தப்பட்டது.  
காரைக்கால் ஸ்ரீகைலாசநாதர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.ஏ.ஆர். கேசவன், செயலர் மு. பக்கிரிசாமி, பொருளாளர் து. ரஞ்சன், உறுப்பினர் கே. பிரகாஷ் ஆகியோர் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரத்தை வியாழக்கிழமை சந்தித்து, கோயில் குளங்களைப் புனரமைக்க சிறப்பு கவனம் செலுத்த வலியுறுத்தினர். 
இதுகுறித்து அறங்காவலர் குழு பொருளாளர் து. ரஞ்சன் கூறியது: காரைக்கால் ஸ்ரீகைலாசநாதர் கோயில் வகையறாவைச் சேர்ந்த 10 கோயில்களுக்குச் சொந்தமான குளங்கள் பல இடங்களில் உள்ளன. இவை ஆக்கிரமிப்புகளால் சுருங்கியும், படிகளின்றியும், பராமரிப்பில்லாத நிலையில் இருக்கின்றன. குளங்களினால் நிலத்தடி நீராதாரம் வலிமையடையும் என்பதோடு, முறையான நிலையில் குளங்கள் இருந்தால் பக்தர்கள், பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.
இதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்க உதவ வேண்டும் என தலைமைப் பொறியாளரிடம் வலியுறுத்தப்பட்டது. மத்திய சுற்றுலா நிதியில் காரைக்கால் பகுதி திருமலைராயன்பட்டினம் ஸ்ரீஜடாயுபுரீசுவரர் கோயில் குளம் உள்ளிட்டவை புனரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும், 2018-ஆம் ஆண்டில் முக்கிய குளங்களைச் சீரமைக்கத் தேவையான நிதி ஒதுக்க ஏற்பாடு செய்வதாகவும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com