விட்டல பாண்டுரங்க சுவாமி கோயில் சம்ப்ரோட்சணம்

திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ விட்டல பாண்டுரங்க சுவாமி கோயில் சம்ப்ரோட்சண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விட்டல பாண்டுரங்க சுவாமி கோயில் சம்ப்ரோட்சணம்

திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ விட்டல பாண்டுரங்க சுவாமி கோயில் சம்ப்ரோட்சண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ ரகுநாத பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீ ரகுமாயி சமேத விட்டல பாண்டுரங்க சுவாமி கோயில் சம்ப்ரோட்சணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் மிகவும் பழைமையானதாகும். இதை இடித்துவிட்டு புதிதாக கோயில் கட்டப்பட்டது. இதையடுத்து, இக்கோயில் குடமுழுக்குக்காக 3 கால யாகசாலை பூஜை சனிக்கிழமை தொடங்கியது. நிறைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்றது.
புனிதநீர் கடம் புறப்பாடும், அதைத் தொடர்ந்து 9.15 மணியளவில் கோயில் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு சம்ப்ரோட்சணமும் நடைபெற்றது. பின்னர், மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ரகுமாயி சமேத பாண்டரங்க சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com