மகளிர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடக்கம்

காரைக்காலில் பி.டி.ஐ. மகளிர் திறன் மேம்பாட்டு மையம் அரசு பொது மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் பி.டி.ஐ. மகளிர் திறன் மேம்பாட்டு மையம் அரசு பொது மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் சமூக நலத் துறை உதவி இயக்குநர் பி. சத்யா பங்கேற்று, மையத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி. மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர் நந்தகுமார் பேசினார். பயிற்சி மையத்தில் 6 மாத கால அளவில் 50 மகளிருக்கு தையல் பயிற்சி அளிக்கப்படும். இது கட்டணமில்லா பயிற்சியாகும். பயிற்சி காலம் முடிந்தவுடன் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்குமிடங்களுக்கு மகளிர் அனுப்பிவைக்கப்படுவர் என நிறுவனத்தினர் தெரிவித்தனர். பி.டி.ஐ. மைய இயக்குநர் இல. அம்பலவாணன் வரவேற்றார். ஜி. லூர்து மேரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com