ஆழ்துளை கிணற்றிலிருந்து பாசனத்துக்கு குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

அம்பகரத்தூரிலிருந்து ரூ. 60 லட்சத்தில் பல்வேறு கிராமங்களுக்கு பாசனத்துக்கு குழாய் பதிப்புப் பணியை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

அம்பகரத்தூரிலிருந்து ரூ. 60 லட்சத்தில் பல்வேறு கிராமங்களுக்கு பாசனத்துக்கு குழாய் பதிப்புப் பணியை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், ஆழ்துளை கிணற்றிலிருந்து பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் திட்டப்பணி தொடங்கப்பட்டது. திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூர் சமுதாய ஆழ்துளை கிணற்றிலிருந்து, குழாய் பதிப்புப் பணி தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி பொதுப் பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்தது: தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இந்த பணிக்கு ரூ. 60 லட்சம் நிதி பெறப்பட்டது. அம்பகரத்தூரிலிருந்து பி.வி.சி. குழாய் பதிப்பு செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் நிறைவுபெறும்போது, அம்பகரத்தூர், குமாரக்குடி, நெடுங்காடு, மேலபொன்பேத்தி, காக்கமொழி ஆகிய கிராமங்களிலுள்ள வேளாண் நிலங்களுக்கு, தண்ணீர் சேதமின்றி எடுத்துச் செல்ல முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் 25 முதல் 30 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 60 விவசாயிகள் பயனடைவார்கள் என்றனர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்ப்பாசனம்) ஜி. இளஞ்செழியன், கூடுதல் வேளாண் இயக்குநர் கா. மதியழகன் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண் துறை உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com