என்.ஐ.டி. கட்டமைப்புகள் முழுமைப்பெற அரசு ஒத்துழைப்பு தரும்: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

காரைக்கால் என்.ஐ.டி.யின் கட்டமைப்புகள் முழுமைப்பெற புதுச்சேரி அரசு முழு ஒத்துழைப்பு தரும் என வேளாண் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார்.

காரைக்கால் என்.ஐ.டி.யின் கட்டமைப்புகள் முழுமைப்பெற புதுச்சேரி அரசு முழு ஒத்துழைப்பு தரும் என வேளாண் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார்.
காரைக்கால் மாவட்டம், திருவேட்டைக்குடி பகுதியில் 280 ஏக்கர் நிலத்தை புதுச்சேரி அரசு ஒப்படைத்தது. இதில் கட்டுமானங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர்கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) செய்து வருகிறது. கல்வி நிறுவனம் முழுமையான செயல்பாட்டை புதிய கட்டடத்தில் தொடங்கிவிட்டது. எனினும், கூடுதல் நிலம் தேவை, சுற்றுச்சுவர் எழுப்புவதில் பிரச்னை, மின்சார இணைப்புகள் கிடைப்பதில் தாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் அங்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், என்.ஐ.டி.க்கு சனிக்கிழமை சென்றார். அவரை நிறுவன பதிவாளர் மகாபத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
கல்லூரி நிர்வாக வளாகம் மற்றும் வகுப்பறை, ஆய்வுக்கூடம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு முழுமைப்பெற்ற கட்டடங்களை அமைச்சர் பார்வையிட்டார். அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார்.
என்.ஐ.டி.க்கு ஒதுக்கீடு செய்த 280 ஏக்கரில், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் வரை பயன்படுத்தக்கூடாது என்ற விதிகளில் சுமார் 20 ஏக்கர் வரை உள்ளதாகவும், என்.ஐ.டி.க்கு பயன்படுத்தக்கூடிய வகையில் கூடுதல் நில ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்.ஐ.டி.யில் சுற்றுச்சுவர் எழுப்பப்படுவதில் நிலவும் பிரச்னை களையப்படவேண்டும், மின் வசதியை விரைவாக செய்துத்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை அமைச்சரிடம் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பு முடிந்து அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: சுவர் எழுப்புவதில் நிலவும் பிரச்னை, மின் இணைப்பில் உள்ள தாமதம் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இந்தப் பிரச்னைகளை புதுச்சேரி அரசு விரைவாக தீர்த்துவைக்கும் என உறுதி கூறியுள்ளேன். மேலும், சில வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு கோரினர்.
என்.ஐ.டி.யை பொருத்தவரை கட்டமைப்புகள் முழுமைப்பெற தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் புதுச்சேரி அரசு செய்யும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com