ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆய்வுக் கூடம் ஏப்ரல் மாதம் திறக்க ஏற்பாடு

காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக் கூடம் ஏப்ரல் மாதம் முறைப்படி திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக் கூடம் ஏப்ரல் மாதம் முறைப்படி திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகிறது.
புதுச்சேரி ஜிப்மர் காரைக்கால் கிளை 49 மாணவர்களுடன், காரைக்கால் கடற்கரை சாலையில் மேம்படுத்தப்பட்ட தாற்காலிக வளாகத்தில் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தற்போது 506 படுக்கை வசதிக் கொண்ட காரைக்கால் அரசு மருத்துவமனை மாணவர்களின் செயல்முறை கல்விக்காக பயன்படுத்தவும், இதற்காக ரூ. 30 கோடியில் இந்த மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய கல்லூரி கட்டடம், மாணவர் விடுதி, குடியிருப்புகள் ரூ. 497.1 கோடியில் கட்டப்படவுள்ளது. இதற்காக ஜிப்மர் நிலைக்குழு தனது ஒப்புதலை கடந்த ஜனவரி 20-ஆம் தேதி வழங்கியுள்ளாக புதுச்சேரி ஜிப்மர் கல்லூரி இயக்குநர் எஸ்.சி. பரிஜா கடந்த மாதம் காரைக்காலில் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கூறினார்.
காரைக்கால் ஜிப்மர் கல்லூரிக்கென கோயில்பத்து பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் இந்த கட்டுமானங்கள் தொடங்கவுள்ளன. மாணவர்கள் ஆய்வுப் பணிக்காக, கோயில்பத்து பகுதியில், புதுச்சேரி செவிலியர் கல்லூரிக்காக கட்டப்பட்ட கட்டடத்தை மாநில அரசு ஜிப்மரிடம் ஒப்படைத்தது. இதை சுமார் ரூ. 17 கோடியில் 3 அடுக்கு கட்டடமாக மேம்படுத்தி, பல்வேறு வசதிகள் உள்ளடக்கப்பட்டு தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிப்மர் வட்டாரத்தினர் கூறியது: மாணவர்களின் அதிநவீன ஆய்வுக் கூடம் அப்துல்கலாம் வளாகம் என அழைக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் வசதிக்காக அதிநவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உடற்கூறு கூடம், உடலை பதப்படுத்தி வைத்திருக்கும் அறை, மாணவர்களுக்கான 2 வகுப்பறைகள், பேராசிரியர்களுக்கான அறை, படுக்கை வசதிகள் கொண்ட வகுப்பறை உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளது. 2 லிஃப்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கேண்டீன், கேஸ் பைப்லைன், ஜெனரேட்டர், கழிப்பறைகள், பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆய்வுக்கூடத்துக்குத் தேவையான உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் கூடத்தை ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர், ஜிப்மர் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு முறைப்படி திறந்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதுவரை காத்திருக்காமல், மாணவர்கள் ஆய்வுக் கூடத்தை அடுத்த வாரம் முதல் பயன்படுத்த நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com