ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்

காரைக்கால் ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில்  ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 16-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 14-ஆம் தேதி பூச்சொரிதல் நடைபெற்று 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 17-ஆம் தேதி புதன்கிழமை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. முன்னதாக வரிசை எடுத்துவந்து திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அர்ச்சுனன், ஸ்ரீ திரௌபதி அம்மன் வீற்றிருந்தனர்.
மாலை மாற்றும் சடங்கு நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்களுடன் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு திருமாங்கல்யதாரணம் செய்து மகா தீபாராதனை காட்டினர். இறைவனுக்கு திருக்கல்யாணம் நடத்துவதன் சிறப்பு, மகிமைகள் குறித்து சிவாச்சாரியார் பக்தர்களுக்கு உரை நிகழ்த்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு தாம்பூலப் பை பிரசாதங்களுடன் வழங்கப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான தீமிதி நிகழ்ச்சி 22-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 24-ஆம் தேதி விடையாற்றியுடன் உத்ஸவம் நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி வி.என்.செங்குட்டுவன்
செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com