சோதனை என்ற பெயரில் அதிமுகவினரை மிரட்டி வசப்படுத்த பாஜக முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வருமான வரி சோதனை என்ற பெயரில் அதிமுகவினரை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாஜக முயற்சிக்கிறது என்று  தமிழக சட்டபேரவை

வருமான வரி சோதனை என்ற பெயரில் அதிமுகவினரை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாஜக முயற்சிக்கிறது என்று  தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவரும், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆர்.  ராமசாமி தெரிவித்தார்.
மத்தியஅரசின் பண மதிப்பு இழப்பு அறிவிப்பு பற்றி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நிகழ்த்திய உரை மற்றும் தொலைக்காட்சிப் பேட்டிகளின் தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை, காரைக்குடி கல்லூரிச்சாலையில் உள்ள கடைவீதிகளில் வியாழக்கிழமை விநியோகம் செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:     பிரதமர் நரேந்திரமோடி முன்னறிவிப்பின்றி பண மதிப்பு வாபஸ் குறித்து தன்னிச்சையாக அறிவித்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று ஜிஎஸ்டி வரிவிகிதம் 18 சதவீதத்திற்கு கீழ் இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியதற்கு மாறாக தற்போது 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரியை பாஜக அரசு உயர்த்தியிருக்கிறது. பொருளாதார நிபுணர்களை அழைத்துப்பேசாமல் தன்னிச்சையாக உயர்த்தியதன் விளைவு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் 30 திருத்தங்கள் செய்திருக்கிறார்கள். மத்திய அரசின் தவறான செய்கைக்கு பாஜக வருத்தம் தெரிவிக்கவேண்டும்.
  அதிமுகவைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் வரவேற்கத்தக்கது. ஆனால் பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனைகள் நடத்தக்கூடாது. வருமான வரி சோதனை என்ற பெயரில் மிரட்டி அவர்களை தங்கள் வசம் கொண்டுவர பாஜக மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றார்.
அவருடன் காரைக்குடி முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் என். சுந்தரம், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். மாங்குடி, கோவிலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அழகப்பன், காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com