டி.ஆர்.பட்டினத்தில்  குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் பகுதியில் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் திட்டப்பணியை  மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருமலைராயன்பட்டினம் பகுதியில் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் திட்டப்பணியை  மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
கருடப்பாளையத் தெருவில் உள்ள குடும்பத்தினருக்கு குப்பை சேகரிக்கும் பையை அளித்து மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார். மக்கும் குப்பை,  மக்காத குப்பை என வீட்டிலேயே தரம் பிரித்து,  வீடு தேடிவரும் சுய உதவிக்குழுவினர், துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்கவேண்டும். சாலையோரத்தில் குப்பையை கொட்டக்கூடாது என அறிவுறுத்தினார்.
திட்டப்பணி குறித்து அவர் மேலும் கூறும்போது, திருமலைராயன்பட்டினத்தில் 11 தெருக்களில் திட்டப்பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 400 வீடுகள் பயன்பெறுகிறது. இந்த திட்டப்பணியை மேற்கொள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். படிப்படியாக கூடுதலாக தெருக்கள் திட்டத்தில் இணைக்கப்படும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ரேவதி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com