காரைக்கால் பண்பலையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

காரைக்கால் அகில இந்திய பண்பலை வானொலியில் புதன்கிழமை காலை முதல் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவுள்ளன.

காரைக்கால் அகில இந்திய பண்பலை வானொலியில் புதன்கிழமை காலை முதல் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவுள்ளன.
இதுகுறித்து நிகழ்ச்சி  மற்றும் நிலையத் தலைவர் நா. தமிழ்வாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியையொட்டி புதன்கிழமை காலை 4.30 மணிக்கு திருஇடையார் ஏ.வி. பாலமுருகன் குழுவினர் நாகசுர இசை, கொங்கன்பட்டு ஏ.வி. முருகையன் தவில் நிகழ்ச்சி. 5.50 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் ஆசியுரை. 8 மணிக்கு இமானின் இசைப் பயணமாக திரைப்பட இசையமைப்பாளர் இமான் பங்கேற்ற தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி.
காலை 10 மணிக்கு எங்க வீட்டுத் தீபாவளி - மகளிர் பங்குபெறும் சிறப்பு நேரலை நிகழ்ச்சி. 11 மணிக்கு ஆயிரம் வாலா வெடிகள் - நேயர்கள் பங்கேற்ற சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி.
பகல் 1 மணிக்கு சரவெடிகள் - தீபாவளி சிறப்பு நகைச்சுவை அரங்கம் - நெறியாளர் - எஸ்.எஸ். சரவணன். பங்கேற்றோர் - சண்முக கண்ணன், சிவ. கிருஷ்ணன்.
பிற்பகல் 2 மணிக்கு பாரம்பரிய பட்டாசு - நெல் ஜெயராமன் பங்கேற்ற தீபாவளி சிறப்பு நேர்காணல். 3 மணிக்கு காத்தாடி ராமமூர்த்தியின் ஸ்டேஜ் கிரியேஷனஸ் குழுவினர் வழங்கும் சுப முகூர்த்தம் நாடகம், மாலை 5 மணிக்கு வெள்ளித் திரையில் தீபாவளி - ஒலித் தொகுப்பு. இரவு 10 மணிக்கு யுகபாரதியின் வெள்ளித்திரைப் பயணம் - கவிஞர் யுகபாரதி பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com