காரைக்கால் துறைமுகத்துக்கு மயில் மீன் வரத்து தொடக்கம்

காரைக்காலில்  ஏற்றுமதி தரத்துக்குரிய மயில் மீன், கேரை உள்ளிட்ட மீன் வரத்து தொடங்கியிருப்பது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில்  ஏற்றுமதி தரத்துக்குரிய மயில் மீன், கேரை உள்ளிட்ட மீன் வரத்து தொடங்கியிருப்பது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து 3, 4 நாள்கள் கடலில் தங்கி மீன்பிடித்துத் திரும்புவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதன்மூலம் ஏற்றுமதித் தரம் வாய்ந்த மீன்கள் கிடைக்கும் என அவர்கள் கருதுகின்றனர். கடந்த ஒரு வாரமாக தூண்டில் முறையில் கிடைக்கும் மயில் மீன், கேரை மீன் ஆகியவற்றின் வரத்து ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
காரைக்கால் துறைமுகத்தில் தினமும் பல விசைப்படகுகளில் மயில் மீன்கள் இறக்கப்படுகின்றன. இந்த மீன் கிலோ ரூ. 200 என்ற விலையில் முகவருக்கு ஏலத்தில் விற்கப்படுகிறது. இது முற்றிலும் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதேபோல ஓரளவு கேரை வகை மீன்களும் வரத் தொடங்கியுள்ளன. ஆண்டில் முற்பகுதியில் ஏப்ரல், மே மற்றும் இறுதியில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மயில், கேரை உள்ளிட்ட ஏற்றுமதி மீன் வரத்து இருக்கும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com