காரைக்காலில் அண்ணா பிறந்தநாள் விழா

அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு திமுகவின் பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு திமுகவின் பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் மாவட்ட திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலக வாயிலில் அண்ணா திருவுருவப் படம் வைத்து திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து கோட்டுச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு நாஜிம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பி.பி.கே.செல்வமணி தலைமையில், செயலர் ஆர்.காளிதாசன், பொருளாளர் கலைமணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாணவரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம், பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் உள்ளிட்டோரும், திமுக இலக்கிய அணி செயலர் அமுதா ஆர்.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com