சுப்ரபாத சேவையுடன் இன்று தொடங்குகிறது புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை (செப். 17) தொடங்குவதையொட்டி, காரைக்கால் ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு சுப்ரபாத சேவை நடைபெறுகிறது.

புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை (செப். 17) தொடங்குவதையொட்டி, காரைக்கால் ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு சுப்ரபாத சேவை நடைபெறுகிறது.
முன்னதாக, மூலவர் திருவடித் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. மாதம் முழுவதும் சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பக்தஜன சபாவினர் செய்துள்ளனர்.
இதுகுறித்து நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் சனிக்கிழமை கூறியது: புரட்டாசி மாதத்தின் வழிபாடாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மூலவர் திருவடித் திருமஞ்சனம், சுப்ரபாத சேவை ஆகிய வழிபாட்டுடன் தொடங்கப்படுகிறது. மாதம் முழுவதும் தினமும் இரவு 7 முதல் 8 மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மாலை மூலவர், உத்ஸவர் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சனிக்கிழமைதோறும் மூலவரும், உத்ஸவரும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் அருள்பாலிப்பர். மூலவர், உத்ஸவரை வழிபாடு செய்வதற்கென கோயில் வளாகத்துக்குள் தடுப்புகளுடன் கூடிய வரிசை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றனர். இதேபோன்று, கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமர் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழிவரதராஜ பெருமாள் கோயில், நிரவி ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள், திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அலங்காரம், வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com