புதுப்பிக்கப்பட்ட மின்கம்பங்கள் மூலம் மின் சேவை தொடக்கம்

திருநள்ளாறில் மாற்றியமைக்கப்பட்ட மின்கம்பங்கள் மூலம் நுகர்வோருக்கு மின் சேவை அளிக்கும் பணியை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

திருநள்ளாறில் மாற்றியமைக்கப்பட்ட மின்கம்பங்கள் மூலம் நுகர்வோருக்கு மின் சேவை அளிக்கும் பணியை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
திருநள்ளாறு பகுதி செல்லூர், தென்னங்குடி, அகலங்கண்ணு, விழுதியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சுரக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இங்கிருந்து மின்சாரத்தை கொண்டு செல்லும் மின் கம்பங்களில் பெரும்பாலானவை சேதமடைந்ததால் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. வயல் பகுதியிலிருந்த மின்கம்பங்கள் சாலையோரத்தில் நிறுவப்பட்டன.
இப்பணிகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து, மின்சேவை வழங்க வேளாண் மற்றும் மின் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், மின் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதிய கம்பங்கள் மூலம் மின் சேவை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு மின் சாதனத்தை இயக்கிவைத்தார்.
அப்போது அவர் கூறியது :
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு செல்லூர், அகலங்கண்ணு பாதையில் வயல் பகுதியில் மின் கம்பங்கள் நடப்பட்டு மின் சேவை வழங்கப்பட்டுவந்தது. பருவமழைக் காலம், காற்று போன்ற பேரிடர் சூழல்களில் கம்பங்கள் சாய்ந்துவிடுவதும், கம்பிகள் அறுந்து விழுந்துவிடுவதும் தொடர் நிகழ்வாக இருந்தது.
இதனை உடனடியாக சீர் செய்வதிலும் சிரமம் நிலவியது. நுகர்வோருக்கு குறைந்த மின் அழுத்த மின்சாரம் கிடைப்பதற்கு இது முக்கிய காரணமாக இருந்தது.
இந்த கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக சாலையோரத்தில் மின்கம்பங்கள் நிறுவி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.14.36 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
புதிய மின்கம்பங்கள் வழியாக மின்சாரம் செல்லும்போது, அகலங்கண்ணு, விழுதியூர், பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றார்.
நிகழ்ச்சியில் மின் துறை செயற்பொறியாளர் ராஜேஷ்சன்யால், உதவிப் பொறியாளர்கள் சத்தியநாராயணன், ஜெகநாதன், இளநிலைப் பொறியாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com