இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 27 மீனவர்கள் தாயகம் திரும்பினர்

எல்லைத் தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்ட

எல்லைத் தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் காரைக்கால் அழைத்து வந்து மீன்வளத்துறை அலுவலர்களிடம்  புதன்கிழமை ஒப்படைத்தனர்.
ராமேசுவரம் மாவட்ட மீனவர்கள் 19 பேர், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு நாள்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, எல்லைத் தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, படகுகளை பறிமுதல் செய்து இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி வந்ததன்பேரில், மத்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் நல்லெண்ண அடிப்படையில் மேற்கண்ட 27  மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏப். 9-ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
இவர்களை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை சர்வதேச கடல் பகுதிக்கு பகல் 12 மணியளவில் அழைத்து வந்து இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். விடுதலையான மீனவர்கள் 27  பேரும் ராணி கெயிடின்லு ரோந்துக் கப்பலில் ஏற்றப்பட்டு காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு மாலை 4 மணியளவில் அழைத்துவரப்பட்டனர். இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் சோமசுந்தரம் தலைமையில் அலுவலர்கள் மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, தமிழக போலீஸார், உளவுப் பிரிவினர் விசாரணை நடத்திய பின்னர்அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.  மீன்வளத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் இவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தாங்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு வந்துள்ளோம். தங்களது படகுகளையும் விரைவாக விடுவிக்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என துறைமுகம் வந்திறங்கிய மீனவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com