அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமிகள் மகா குரு பூஜை விழா: நாளை தொடக்கம்

காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமிகள் 104 -ஆவது மகா குருபூஜை விழா திங்கள்கிழமை (ஆக. 20) தொடங்கவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமிகள் 104 -ஆவது மகா குருபூஜை விழா திங்கள்கிழமை (ஆக. 20) தொடங்கவுள்ளது.
அக்கரைவட்டம் கிராமத்துக்கு வெளியூரிலிருந்து வந்து பல்வேறு சித்துகளை செய்து, மக்களால் பெரிதும் வணங்கப்பட்டவராகத் திகழ்ந்தவர் சிவசித்தர் சித்தானந்த சுவாமிகள். இவரது அடக்க தலத்தில் சித்தானந்த சுவாமிகள் உருவச் சிலை வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சுவாமிகளின் 104 -ஆவது ஆண்டு மகா குரு பூஜை விழா 2 நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை தொடங்குகிறது. திங்கள்கிழமை காலை சித்தானந்த சுவாமிகள் மடத்தில் கணபதி ஹோமம், 11 மணியளவில் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சிவசித்தர் மகா ஹோமம் நடைபெறவுள்ளது.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் திருமலைராஜன் ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மடத்துக்குச் செல்கின்றனர்.
அசுபதி பூஜை, சித்தரின் ஜீவ பீடத்தில் அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. மதியம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு சித்தானந்த சுவாமிகள் வீதியுலாவுடன் குருபூஜை விழா நிறைவடைகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்கரைவட்டம் ஸ்ரீ சோமநாதசுவாமி கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com