ஆற்றில் மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

திருமலைராஜனாற்றில் அரசு நிர்வாக அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருமலைராஜனாற்றில் அரசு நிர்வாக அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் பகுதி விழுதியூர், படுதார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் அரசலாறு, திருமலைராஜனாறு உள்ளிட்டவற்றில் மணல் எடுப்பதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர்.
மாவட்ட  சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா உத்தரவின்பேரில், வட்டாட்சியர்  பொய்யாதமூர்த்தி தலைமையில் வருவாய்த் துறையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். வருவாய்த்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான ஒரு குழுவினர் படுதார்கொல்லை, விழுதியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியை மேற்கொண்டனர்.
அப்போது விழுதியூர் வழியாக காரைக்காலுக்கு மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை நிறுத்தி மணல் எடுத்ததற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தோரை லாரி ஓட்டுநர் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, நிரவி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
போலீஸார் விரைந்து சென்று ஓட்டுநரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். வருவாய்த்துறையினர்  லாரியை பறிமுதல் செய்து காரைக்கால் கொண்டு சென்றனர். இதுகுறித்து லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
மேலும், படுதார்கொல்லை பகுதியில் பைக்கில் மணல் எடுத்துக்கொண்டு வந்த ஒருவரையும், மணல் எடுக்க பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com