மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்: ஆட்சியர் ஆர். கேசவன்

மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன்.

மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன்.
காரைக்கால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை கல்வித் துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகள்  தின விழாவில் மேலும் அவர் பேசியது: சுதந்திர இந்தியாவில் வாழும் மாணவர்கள், இந்தியா சுதந்திரம் அடையும் முன் இருந்த நிலை, சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள், சுதந்திரம் அடைந்த பிறகு தேசம் ஒருங்கிணைந்த விதம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களில் ஜவாஹர்லால் நேரு முக்கிய பங்கு வகிக்கிறார். இவரது பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வந்தாலும், அவரது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, மறுமணம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை நாம் தெரிந்திருக்க வேண்டும். தலைவர்கள் குறித்து மாணவர்கள் முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும். வரலாறு புரிதல் என்பது மாணவர்களை நல்ல எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும், அதில் மிகுந்த ஈடுபாடு இருந்தால் மட்டுமே வெற்றி வசப்படும். தற்போது வாட்ஸ் அப், முகநூல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் வரும் அனைத்து தகவல்களும் உண்மை என்றோ, உண்மை இல்லை என்றோ கூறிவிட முடியாது. ஆனால், வதந்திகளை நம்பிவிடக் கூடாது. தகவல்களில் துல்லியத்தன்மை இருக்கவேண்டும். அதை உணரும் பழக்கத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியை, நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் தொடங்கி வைத்து பேசினார். குழந்தைகள் தினத்தையொட்டி பாட்டு, ஓவியம், கோலம், தனி நடிப்பு,  வண்ணம் தீட்டுதல், மாறுவேடம்,  
விநாடி - வினா, கைவினைப் பொருள் செய்தல், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டதில் 270 மாணவர்கள் பரிசு பெற்றனர்.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி,  கல்வித்துறை துணை இயக்குநர் (பொ) கேசவ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி பி. சத்யா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, பள்ளி வட்டத் துணை ஆய்வாளர் எஸ். கார்த்திகேசன் வரவேற்றார். நிறைவாக தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் கோவிந்தராஜன் நன்றி 
கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com