ரூ.4.5 லட்சத்தில் ஆழ்குழாய் திட்டப்பணி: அமைச்சர் தொடங்கிவைப்பு

திருநள்ளாறு அருகே கீழஅத்திப்படுகை கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4.5 லட்சத்தில் ஆழ்குழாய் அமைக்கும் பணியை அமைச்சர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

திருநள்ளாறு அருகே கீழஅத்திப்படுகை கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4.5 லட்சத்தில் ஆழ்குழாய் அமைக்கும் பணியை அமைச்சர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
பூமி பூஜை நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த திட்டப்பணி ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, குடிநீர் விநியோகம் சீர்செய்யப்படும் என துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய மின் மாற்றி இயக்கிவைப்பு : திருநள்ளாறு பகுதி இந்திரா நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியினருக்கு நளன் குளம் அருகே உள்ள மின் மாற்றி மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது. கோடைக்காலத்தில் கூடுதல் மின் தேவை இருப்பதால், இந்திரா நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தினருக்கு மின் தடை அவ்வப்போது ஏற்படுவதும், சீரான மின்சாரமில்லாததும் தொடர்ந்தது.
இதையொட்டி வேளாண் மற்றும் மின் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் அறிவுறுத்தலின்பேரில், ரூ.7 லட்சம் செலவில் புதிய மின் மாற்றி இந்திரா நகரில் நிறுவ மின் துறை நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி நிறுவப்பட்ட மின் மாற்றியை அமைச்சர் இயக்கிவைத்தார்.
இந்த புதிய மின் மாற்றி மூலம் இந்திரா நகர் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புவாசிகளுக்கு மின்சாரத் தேவையில் குறைபாடு இருக்காது என அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறினார். நிகழ்ச்சியில் மின் துறை செயற்பொறியாளர் ராஜேஷ் சன்யால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com