கல்வி நிலைய ரொட்டிப் பால் வழங்கும் ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு ரொட்டிப் பால் வழங்கும் ஊழியர்களுக்கு நிலுவை மாத ஊதியத்தை வழங்க  வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு ரொட்டிப் பால் வழங்கும் ஊழியர்களுக்கு நிலுவை மாத ஊதியத்தை வழங்க  வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர், கல்வித்துறை அமைச்சருக்கு காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் எம். ஷேக் அலாவுதீன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பது :
புதுச்சேரி அரசின் கல்வி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு தயார் செய்யும் ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு சம்மேளனத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று, மாத ஊதியம்  ரூ. 6,458-ஆக  உயர்த்தப்பட்டது. அந்த ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஆதரவு தந்த புதுச்சேரி அரசுக்கு சம்மேளனத்தின் சார்பில்  நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்வி நிலையத்தில் மதிய உணவு தயார் செய்யும் ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.  தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு சில நாள்களில் வரவுள்ளது. இந்த சமயத்தில் அவர்களுக்கு ஊதியமில்லாமல்  இருப்பது அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்கவும், மற்ற தினக்கூலி ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் பண்டிகை கால மதிப்பூதிய தொகைகளை வழங்கவும், மேலும், விடுமுறைக் காலமாகக் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மே மாதத்துக்குரிய ஊதியத்தை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com