ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரிக்கை

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டம் நாகையில் அண்மையில் நடைபெற்றது. வட்டாரத் துணைத் தலைவர் சு. தியாகராசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன், துணைத் தலைவர் ஜெ. உஷா, வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம், வட்டாரத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், பொருளாளர் தனுசுமணி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆதார் அட்டையில் புகைப்படம் இணைக்கும் பணியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும், வாக்காளர் சேர்க்கை பணியில் டி.எல்.ஓ-வாக பணியில் ஈடுபட்ட ஆசியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய மதிப்பூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
ஜனவரி 2017-இல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவித்து, நிலுவையுடன் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்படி, கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் புதிய பணியிடங்களுக்குச் செல்லும் வகையிலும், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவும் கலந்தாய்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com