ஆடித் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்ட கள்ளிமேடு கோயிலில் வழிபாடு

ஆடித் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள கள்ளிமேடு ஸ்ரீ பத்ரகாளியமன் கோயிலில் வழக்கம்போல,ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

ஆடித் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள கள்ளிமேடு ஸ்ரீ பத்ரகாளியமன் கோயிலில் வழக்கம்போல,ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
இங்கு ஆண்டுதோறும் ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் பங்கேற்பர்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் நடைபெறும் ஆடி பெருந்திருவிழாவில் சுவாமி வீதியுலா, கப்பரை விழா நடத்தப்படும். இதில், வெளியூர்களில் இருந்து அதிக அளவில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பழங்கள்ளிமேடு பகுதியில் வசிக்கும் தலித் வகுப்பு மக்களுக்கு மண்டகப்படியுடன் கூடிய வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாக கூறப்படும் பிரச்னை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.
தலித்துகளுக்கு மண்டகப்படி உரிமைகோரும் விவகாரத்தில் ஆகம விதிகளை காரணம் காட்டி  உபயதாரர்கள் மறுப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு ஆடித் திருவிழாவுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் நிகழாண்டு திருவிழாவுக்கும் தடை உத்தரவை நீட்டிப்பு செய்து கோட்டாட்சியர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, வழக்கமாக ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் பெருந் திருவிழாவையொட்டி நடைபெறவேண்டிய காப்புக்கட்டும் விழா ஆக.7 ஆம் தேதி நடைபெறவில்லை.
ஆனாலும், வழிபாடு செய்ய கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. இதையடுத்து,ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் செயல் அலுவலர் மணவழகன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி, ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com