ஆசிரியர் திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்

புதுதில்லி அனைத்திந்திய தொழில்நுட்பக் கழகம் சார்பில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான இருவார திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

புதுதில்லி அனைத்திந்திய தொழில்நுட்பக் கழகம் சார்பில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான இருவார திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
மொபைல் ரோபோக்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியின் பயன்கள் என்ற தலைப்பில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் எஸ். பரமேஸ்வரன் தலைமை வகித்து, பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார். 
நவ. 20-ஆம் தேதி தொடங்கி இந்தப் பயிற்சி வகுப்பு இரு வாரங்களுக்கு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள் 70 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சி முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.  அனைத்திந்திய தொழில்நுட்பக் கழக மண்டல அலுவலர் ஆர். பாலமுருகன் முதன்மை அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.  அப்போது, பேராசிரியர்கள் தாம் பெற்ற தொழில் நுணுக்க அறிவைக் கொண்டு புதிய ஆராய்ச்சித் திட்டங்களை தீட்ட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். 
ஆராய்ச்சியாளர் வேணுகோபால், இயந்திரவியல் துறை ஐஐடி பேராசிரியர் பி.வி. மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர். 
பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளரும், இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி முதல்வருமான ராமபாலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com