"3.68 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி'

நாகை மாவட்டத்தில் 3.68 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறினார்.

நாகை மாவட்டத்தில் 3.68 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறினார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற, ரூபெல்லா தடுப்பூசி பணி தொடர்பான பல்துறை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
ரூபெல்லா என்ற நோய் ஜெர்மானிய மணல்வாரி அம்மை எனப்படுகிறது. காற்றின் மூலம் பரவக்கூடிய இந்தத் தொற்று நோய், ஒரு குழந்தையிடமிருந்து மற்ற குழந்தைகளுக்கும் பரவக்கூடியது. கருவுற்ற பெண்கள் ரூபெல்லா நோயால் பாதிக்கப்படும் போது, கரு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இந்நோயை ஒழிக்கும் வகையில், நாகை மாவட்டத்தில் பிப். 6 -ஆம் தேதி முதல் பிப். 28-ஆம் தேதி வரை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.  பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும், இரண்டாவது வாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கும்,  மூன்றாவது வாரத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் பணி நடைபெறும். 300 செவிலியர்கள், 600 இதர பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 9 மாதத்துக்கு மேல் 15 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் நடைபெறும் இப்பணியின் மூலம், மாவட்டத்தில் 3.68 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றார் ஆட்சியர்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வெ. விஜயலட்சுமி, சுகாதாரத்துறை அலுவலர்கள், கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com