அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பெருந்தலைவர் காமராஜர் பேரவை சார்பில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கல்வி

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பெருந்தலைவர் காமராஜர் பேரவை சார்பில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் இலவச  பாட புத்தகங்கள்  வழங்கும்  விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் இமயவரம்பன் தலைமை வகித்தார். தமாகா வட்டாரத் தலைவர்கள் கோவி.பண்டரிநாதன், நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை வடக்கு மாவட்டத் தலைவர் பூம்புகார் எம். சங்கர்,  கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளைப் பாராட்டிப் பேசினார். மேலும், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கினார்.
இதேபோல்,  ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பாடபுத்தகம், நோட்டுக்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், சிவாஜி பேரவை மாநிலப் பொறுப்பாளர் ரங்கநாதன், தேசிய பேரவை நலங்கிள்ளி, காமராஜர் பேரவை தலைவர் இளங்கோவன், செயலர் மாரிமுத்து, குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com